Thursday, May 3, 2007

தொலைந்து போகாத
சிறிய ஜாடிகள்
முன் எப்போதோ பரிசளிக்கப்பட்டவை
உடைந்து போகாது பத்திரப்படுத்தி பத்திரப்படுத்தி
நீண்ட நாட்களாய் உயிர்த்திருக்கிறது
நினைவுப் பரிசு
எதன் பொருட்டு
எதன் ஞாபகாரத்தமாய் என்பதெல்லாம் புரியாது
நீண்ட நாட்களாய் இருக்கிறது
யாருடையது என்பதறியாது
யாரும் கோராத சிறிய பரிசுப் பொருள்.
என் பிறப்பிற்க்கு முன்னதான
எனக்குப் பரிச்சயமில்லா யாரோ ஒருவரின்
பரிசை என் வீடு தாங்கிக் கொண்டிருக்கிறது.
எவருக்கோ அளிகக்கப்பட்ட அபரிதமான அன்பை
பாதுகாக்கும் பொறுப்பு என்னுடையது.
எங்கெல்லாமோ வருகிறது
என்னுடையது போல
நிச்சயமற்ற ஏதோ ஒன்றை சுமந்து கொண்டிருக்கிறேன்
எப்போதாவது உரித்துள்ளவரிடம் சேர்ப்பேன் என.
நடுநயமாய் இருந்து கொண்டிருக்கும் சிறிய பொருளை
ஒரு அன்ரிக் பொருளைப் போல பாரத்துக் கொண்டிருக்கிறார்கள்
அதற்கான விலையை தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யாருடைய எதையோ திருடிய சிறுமியைப் போல
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்னுடையதற்றதான பொருளை

1/21/07,11:41 PM

2 comments:

said...

\\எவருக்கோ அளிகக்கப்பட்ட அபரிதமான அன்பை
பாதுகாக்கும் பொறுப்பு என்னுடையது.\\

மென்மையான இதயத்தின் வெளிப்பாடாய் இருக்கிறது மேற்கண்ட வரி. அந்தாரா!உங்கள் பெயரைக் கடந்துசெல்ல முடியாதளவு வித்தியாசமாகச் சிந்திக்கிறீர்கள்.

said...

/யாருடைய எதையோ திருடிய சிறுமியைப் போல
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்னுடையதற்றதான பொருளை/

அறைந்து சாத்தப்படும் கதவு,நள்ளிரவு தாகத்துக்கு பனிபடர தூங்கும் குளிர்பெட்டியை திறக்க அஞ்சும் மனங்களின் வரிசையில் இதுவும் :)