தூர்ந்து கொண்டிருக்கும்
உறவுகளின் நினைவுகளுடன்
தனித்திருக்கிறேன்
சிறு சிறு செயற்பாடுகள்
பெரும் கனவாய் அழுத்த
சூனியத்தின் கதவுகளை
வெறித்தபடி இருக்கும்
ஒரு ஜோடி விழிகளுக்கு
கனவுகள் கிடையாது
அசையாது பார்த்துக் கொண்டிருக்கின்றது கடிகாரம்
மாற்றப்படாத சுழற்சியுடன்
நீண்ட வெளிப் பாதைதியில்
எஞ்சிவிட்ட இரு மிருகம்
கவலையின்றிப் புணர்கின்றது
இறுக்கி மூடிய இருட்டறைகளுள்
முகம் தொலைந்து
உடல் தொலைந்து
தனித்துப் போனேன்.
20-07-2005
Subscribe to:
Posts (Atom)