எட்டுத் திக்கும் வார்த்தைகளால்
அறுக்கின்றது தனிமை
குரலற்ற வெறுமையில் அலைந்து கொண்டிருக்கிறேன்
நண்பா நீ கற்றுத் தந்த தனிமையின் சுரங்கள்
எல்லாம் மறந்து போனேன்
கனவுகளும் தொலைந்து போன
இன்றைய பொழுதில் பாடவும் முடியவில்லை
குரல் எடுத்து கத்தவும் முடியவில்லை
உச்சஸ்தாயிக்கு போகிற குரலின் வனப்பெல்லாம் அழிந்து
வெறும் சத்தம் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
பாடக் கற்றுத் தந்தவர்கள் யாராவது அழக் கற்றுத் தந்திருக்கலாம்
இன்றைய பொழுதுகள் உயிர்ப்புடன் இருந்திருக்கும்.
தொலைதலின் பாடலைக் கேட்டபடியிருக்கும் குஞ்சுகளே
வாழ்தலின் இனிமைகளையெல்லாம் யாரிடம் அறிவீர்கள்
வாழ்வதற்கான வழிகளற்ற இன்றைய நிலையில்
உங்களுடைய கூடுகளை விட்டு தொலைந்து போங்கள்
வழியில் எங்காவது தங்குவதற்கான வெளிகளைக் கண்டடையுங்கள்
அவை உங்களுக்காக பின்னப்பட்ட வலைகளாகவோ சவப்பெட்டிகளாவோ
இல்லாதிருக்கட்டும்
நீண்ட நெடுங்காலம் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் காண
வாழுங்கள்
தானாய் மரணம் வரும் வரை வாழ்தலைத் தவிர வேறு என்ன வேண்டும் உங்களுக்கு.
9/08/07
10:59 PM
Thursday, September 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அந்தாரா
ரொம்ப நாளா கானோம்னு பார்த்தேன்
எங்கே ரொம்ப நாளா காணோம்?
தலைப்பில்லா எழுதிய கவிதை முதல் வரியே தலைப்பாய் எடுத்துக் கொண்டது. நம் வாழ்வைப் போல.
அந்தாரா, ஏற்கெனவே எழுதப்பட்டதுதான். நீண்ட நாட்களாகக் காணவில்லை உங்களை. (நானும் தொலைந்துபோயிருந்தேன்) வழக்கம்போல உங்கள் கவிதை ஈர்த்தது.
Post a Comment