Monday, January 8, 2007
பசி
தீ சுவாலைகளை விழுங்கிய
இரவின் தனிமையில்
பசி உயிரைக் கொல்கிறது
இருண்ட வெளிகளில்
உயிரின் தேவையை மறுத்த படி
ஒலிக்கிறது கடிகாரம்
நீண்ட நேரமாய்
உண்ட படியிருக்கிறேன்
வயிற்றை அடைக்கிறது
பசி
முடிவுறாத பசியை
மறுபடியும் கிளறிக் கொள்கிறது
உணவு
நிரப்பப்படாத சொல்லின் ஆழங்களை
கேட்டறியாத வார்த்தைகளை
மீண்டும் ஒருமுறை
கேட்டுக் கொள்கிறேன்
தொண்டையைத் துளைத்து
உள்ளிடும் வேகத்தை அடக்க
ஆயுதங்களற்று
நிராயுதமாகிறது உடல்
எந்த கம்பிகளாலும் கட்ட இயலாதது
எதனாலும் துளைக்க முடியாதது
வயிறு
கிழித்துப் போடுகிறேன்
உடைந்து சிதறிற்று
தங்க முட்டைகள்
----
நவம்பர்26/2006
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்லதொரு கவிதை.
.....
வலைப்பதிவுக்கு வரவேற்பு :-).
thanks dj
பசியின் கோரத்தை உங்கள் கவிதைகளால் உணர வைத்து விட்டீர்கள்.
நல்லதொரு கவிதை.
.....
வலைப்பதிவுக்கு வரவேற்பு.
Post a Comment