Friday, October 26, 2007

மூடப்பட்ட அறைகளுள்
ஏசி ஓடிக் கொண்டிருக்கிறது
மெழுகுதிரியை பத்த வைக்க முனைகிறேன்
தனித்திருக்கையில்
எப்படியெல்லாமோ உயிர்க்கத் தொடங்கிவிடுகிறது
தற்கொலைக்கான முனைப்பு
கடுகளவும் புரிய முடியாத மந்த மனோநிலை
எங்கிருந்தோ வந்துவிடுகிறது.
இருக்கின்ற தனிமையை, வாசிப்பை துளையிடுகிறது
துப்பாக்கி வேட்டுக்களையொத்த மரணத்தின் வாசனை
விளங்கவே முடியாதிருக்கின்ற போதுகளில்
வாசித்த எழுத்தூடாக எழுத்தாளர்கள் சுருக்கிட்டுக் கொள்கிறார்கள்
எங்கோ புரியாத மொழியிடையே வெறுமை நுழைந்து விடுகிறது.
தொலைபேசி அழைப்பில் அலைக்கழியப்பட்டு திசைதெரியாது பயணித்து
இறுதியில் கொலைக்கருவி காது வழியே வெளியேறி
எப்படியோ சாவு நிகழ்ந்து விடுகிறது.

9/29/07

1 comments:

said...

நண்பருக்கு
எதேச்சையாக கோகுலில் உலவிக் கொணடிருந்தபோது 'அத்துவான வெளி' என்ற தலைப்பு என்னை இழுத்தது. காரணம் அப்பெயரில் மெளனி ஒரு கதை எழதியுள்ளார். மெளனியை எண்ணித்தான் இங்கு வந்தேன். படிகத் துவங்கியவுடன் உங்களுடைய எல்லா பதிவுகளையும் முழுமையாகப் படித்துவிட்டேன்.

பாசங்கற்ற எழத்தும், தயக்கத்தை உடைத்து பேசும் துணிச்சலும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. கவிதைகளிலும், பிரச்சனைகளை பார்ப்பதிலும் உள்ள உங்கள் அனகுமுறை அருமை. படைப்பும் எழுத்தும் உங்களிடம் உள்ளது. ஏன் பதிவுப்பணியை நிறுத்திவிட்டீர்கள்?

பேர்ணோ பற்றிய ஆய்வடிப்படையிலான ஒரு உரையாடலை நான் பதித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் போர்ணோ பற்றிய பதிவு.. உண்மையான உணர்வுகளை முன்வைத்துள்ளது. எனது பதவின் அறிவு தரும் உணர்வைவிட உங்கள் எழுத்து ஏற்படுத்தும் உணர்வு அதிகம்.

தொடருங்கள்...

அன்புடன்
ஜமாலன்.