Monday, April 16, 2007

தனிமையின் குரல்

1.
அந்தரங்க வெளியில்
ஊடுருவிக் கிடக்கும்
எழுத்தாளர்களின் குறி
என்னைநோக்கியிருப்பதாய்
விசித்திரமான ஒரு உணர்வு வந்து போகிறது
2.
தெளிவற்ற எழுத்துக்குள் சிக்கலாய்
வெறித்துக் கிடக்கின்ற உன்னை
நான் கண்டடைந்ததாய் நினைத்த போதும்
யாருடனும் பகிர முடியவில்லை.
3.
தெளிந்த நிலையில் இருக்கின்ற எவரையுமே
எனக்கு புரிந்து கொள்ள முடியாது போகிறது
தெளிவானதென்றால் என்ன
சுவடுகளைப் போல எதுவுமே தெளிந்தாய் இருந்ததில்லை
எனக்கு..
4.
சாப்பிட்டு விட்டுப் போ என்கிற அப்பாவை
கடந்து போகிற வெளியில் மறந்து போய்
என்னத்துக்காக கூப்பிட்டார் என்கிற அவஸ்தை வருகிறது
போகிற வெளிகளையெல்லாம் சபித்துக் கொண்டு

5.
யாருடைய வீடு என்பது கேள்வியாய் இருந்ததில்லை
அவளின் எல்லா குணங்களும் நிறைந்த இடம்
பேசுகின்ற ஜடம்
தங்கி விட்டுப் போகின்ற கூடு '
எனக்கு அம்மாவின் இடம்
இப்போது தான் புரிகிறது
அதற்க்கு சொந்தமானவர்களுக்கும்
அது வீடில்லை என்பது

4/10/07.

6 comments:

said...

அந்தாரா!உங்கள் எழுத்துக்கள் எனது ஒரு தோழியினை நினைவுறுத்துகின்றன. உங்களைப் போல அல்லது இந்தக் கவிதை வழியாகப் பேசியவளைப்போல அந்தர வெளியில் திரிபவர்களின் மனவுணர்வு நன்றாக அவளைப்போலவே 'சிக்கலாக'வெளிப்பட்டிருக்கிறது. நன்றி

said...

அந்தாரா, இது 'பப்லிஷ்'பண்ண அல்ல. உங்கள் பக்கத்தில் சில எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. அவை பகிரவருவதைத் திசைதிருப்பி விடலாம் என்ற நோக்கத்தினால் மட்டும் இதைச் சுட்டுகிறேன். 'தெளிந்ததாய்','கேள்வி','அதற்கு'என மூன்று சொற்களில் எழுத்துப்பிழைகள். மனவோட்டத்தின் வேகத்திற்கு இணையாக எழுதும்போது இவை நடக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. ஆனாலும் தோழி!வாசிப்பவர்களுக்கு அது தெரியாதல்லவா... 'புறொபைல்'இல் 'விவாதிக்கலாம்'என வரவேண்டியது 'விவாதிக்காலம்'என வந்திருக்கிறது கவனியுங்கள். சுட்டிக்காட்டியதற்கு கோபிக்கிறீர்களா... பரவாயில்லை. :)

said...

இன்னிக்குதான் இந்த பக்கம் கண்ல பட்டது :)வீர்யம் நிறைய இருக்கு ..சாயந்திரம் விரிவா எழுதுறேன்..

said...

/உன்னை
நான் கண்டடைந்ததாய் நினைத்த போதும்
யாருடனும் பகிர முடியவில்லை./

சொல்ல முடியாததின் துக்கம் :)

மிகுந்த வலி இல்லையா??

said...

thanks thamizhnathy & ayyanar...

Thamizhnathy: i appreciate ur comments. since i post these using public computer i hve less time to be careful abt the spelling mistakes. i will try to fix it coming days. thanX!

said...

//தெளிந்த நிலையில் இருக்கின்ற எவரையுமே
எனக்கு புரிந்து கொள்ள முடியாது போகிறது //

தெளிவாய் இருக்கிறது அந்தாரா.