Thursday, April 12, 2007

போனோகிராபி/Phornography


என்னுடைய காமம் பேசப்படவேண்டியது
என்னுடைய காமம் உணரப் படவேண்டியது
என்னுடைய காமம் புறக்கணிக்கக் கூடாது
என்னுடைய காமத்திலிருந்து தான் உன்னதமான உன்னுடைய காமத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
இப்படியாக யோசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய காமத்தை சங்கோசமின்றி பேசவேண்டும் என்பதே காமத்தைப் பற்றிய என்னுடைய மிகப்பலத்த எதிர்பார்ப்பு எனலாம். காமத்தை இழிவான அருவருப்பான மிருகத்தனமான உணர்வாக பார்ப்பவர்கள் அதிகம் பெண்களே. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட காமம் சமூகத்தின் மரபாத்தமான ஒழுக்க கோட்பாடு தான் என்பதை உணராது ஆண்களின் நிலைப்பாட்டிலிருந்தே காமத்தை பார்க்க முனைகிறார்கள்.
என் வீட்டு ஆண்கள் என்னைக் காண்கையில் அவர்கள் பார்க்கிற நிகழ்சியை மாற்றுவது என்னைத் தொந்தரவு செய்கிறது. பார்க்கிற திரைப்படங்களில் வரும் படுக்கையறை காட்சிகளின் போது அவர்களுக்கு ஏற்படும் அசெளகர்யம் யோசிக்க வைக்கிறது. போனோகிராபி பார்க்கிற ஆண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்கிற மதரீதியான நிலைப்பாடு பரவலானவர்களிடம் இருக்கிறது. தெருவில் போகிற பெண்களை நக்கலடித்து(நாகரீக சொல்லாடல் துன்புறுத்துதல் பெண் மீதமான வன்முறையே சரியான பதம்) பெண்கள் மீதமான உறுப்புக்களை குறித்தான கெட்ட வார்த்தைகளை உபயோகித்து அல்லது தெருவில் திரிபவர்கள் எல்லோரும் பொதுவானவர்கள் என்கிற ரீதியயில் அவர்களை தொந்தரவு செய்வது. இங்கு எல்லாமே கலைத்துவமாய் செய்ய வேண்டும் மென்மையாய் செய்ய வேண்டும் கவித்துவமாய் இருக்கவேண்டும் இல்லாதவர்கள் கெட்டவர்கள் தான். கிருஸ்ணனுக்காக ராதா கணவனைத் துறந்தால் அது அமரத்துவமடையாத காதல் அதுவே பெண்கள் செய்தால் கள்ளக் காதல். இவ்வகையான முரண்களிலிருந்தே நான் காமத்தை அணுகுகிறேன். அதனூடாக போனோ போன்றவைகளை அவை ஆண்ளுக்கானதாய் மட்டுமே இருப்பதூன அரசியலை உணர்கிறேன். நண்பர்களுடன் பேசும் போதும் ஆண்களுடைய சகோதரர்களுடைய அறைகளுள் நுழையும் போதும் தட்டி விட்டுத் தான் போவதுண்டு அதனூடாக அவர்களும் அதைக் கடைப்பிடிப்பதுண்டு. காரணமாக அவர்களுடைய காமம் சார்ந்த வெளியை அவர்களுடைய அசெளகர்யங்களை தவிர்க்க முனைவதுண்டு. இன்றுவரை நண்பர்கள் போனோ பார்ப்பதை சங்கடமின்றி பகிரும் போது அசுவாசமான ஒரு திருப்தி நிலவுவதுண்டு அப்படியான தருணங்களில் அதை அவர்களடைய நண்பிகள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்கிற சங்கடமும் ஏற்படுவதுண்டு. நடிகையை பார்த்து ஜொள்ளு விடுவது இடுப்பை காட்டுவதை ரசிப்பது என்று அதை ஒரு இரசிக மனதுடன் செய்கிற ஆண்கள் மீதமான மரியாதை போனே பார்ப்பவர்களிடம் வருவதில்லை. முதலாமவர்கள் இரசிகர்கள், இரண்டாமவர்கள் காமுகர்கள. பகுதி பகுதியாக பெண்ணை இரசிக்கிற இரசிகர்களிடம் பெண் உடல் பற்றிய எதிர்பார்ப்புக்கள் காமத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இருப்பதே இல்லையா?
அல்லது நம் காமத்தை புறக்கணிப்பதூடக, நம் காமத்தில் அருவருப்படைவதனூடாக மற்றவர்களுடைய காமத்தை விமர்சிக்க விழைகிறோமா.
எங்கள் தமிழ் ஆண்களுக்கத் தான் கவர்சிக்கு ஒரு நடிகை காமத்துக்கு ஒரு நடிகை ஜொள்ளு விட ஒரு நடிகை என்று வருடா வருடம் நடிகைகள் மாறிக் கொண்டிருக்கிறார்களே. பெண்கள் என்னவோ தலைமுறையாய் ஒரிரு நடிகர்களையே பாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
1/13/07

11 comments:

said...

என்னை அறியாமல் ஓரிரு பின்னூட்டங்கள் இட்டு இனி பின்னூட்டங்களே இடுவதில்லை என்ற முடிவை உங்கள் பதிவு கொஞ்சம் அசைத்து விட்டது.
இப்போதுதான் முதல் முறையாக உங்கள் பதிவை படிக்கிறேன். "போனோகிராபி/Phornography" அட்டகாசமான தலைப்பு. ஓரளவு காமம் என்பதை வெளிப்படையாக பேச ஆரம்பித்து வைக்கிறீர்கள். கொஞ்சம் வித்தியாசமான களத்தில் இருக்கிறீர்கள். ஆனால் இது தேவையானதே.

said...

\\ பெண்கள் என்னவோ தலைமுறையாய் ஒரிரு நடிகர்களையே பாத்துக் கொண்டிருக்கிறார்கள்.\\ :-))

அதிகம் பேசப்படாதது.இதை வாசிக்க எனக்கு "The girl next door" தான் ஞாபகம் வந்திச்சு.

said...

நான் முன்னர் போட்ட பின்னோட்டம் வந்ததா?

said...

thanks snehithy & anonymous (come with a name, so its easy for to communicate next time!)...

said...

இந்த வழியாக வந்தேன் இங்கே....

கட்டுடைக்கும் உங்களது இந்த பதிவு ஒரு சமூக தேவை என்று மட்டும் புரிந்துபோனது...

நிறைய எழுதவேண்டும் நீங்கள்...!!!

said...

எனது அடுத்த தலைப்பு :"ஏன் சென்ஸார்கள் கலைக்கப்பட வேணும்!". உண்மையாகஎழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்

said...

கிட்டத்தட்ட மதுரா வோட எழுத்து
மாதிரிதான் இருக்குது.

போகப்போக தெரியும்.

ஆனாலும் உங்களின் எழுத்து நடை
நன்றாக இருக்கிறது.

அந்தாரா என்றால் என்ன???

said...

காதல் உணர்வுகளைப் பற்றி ஒரு பெண் பேசினாலே தப்பான கண் கொண்டு பார்க்கும் சமூகத்தின் முன் நீங்கள் காமம் பற்றிப் பேசத் துணிந்தது பாராட்டுக்குரியது. அந்தக் காமத்தையும் நீங்கள் பார்க்கும் கோணமும் எழுதிய விதமும் வித்தியாசமாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

said...

அருமை அந்தாரா...

எல்லார் மனதிலும் இருக்கும் யாதார்த்தங்களை வார்த்தைகளாக வடிவைமைத்து விட்டீர்கள்...

நன்றி

said...

நன்றாக இருந்தது அந்தாரா. உங்கள் கவிதைகளைப் போலவே.

said...

காமம் பற்றி தமிழில் பேசப்படுவதே இல்லை. பேசாப் பொருளை பேசியதற்கு முதலில் பாராட்டுக்கள். காமம் பற்றிய எங்கள் எல்லோருடைய பார்வையும் ஆண்நிலைப் பார்வையாலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இந்தப் பார்வையில் பெண்உணர்வு என்பது கண்டுகொள்ளப்படுவதேயில்லை.இதற்கு இவை பற்றிய திறந்த விவாதம் தேவை. அத்தோடு பாலியல் பாடசாலைக் கல்வியாதலும் வேண்டுமென்பேன்.