பயித்தியக்காரியைப் போல
தினமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
எப்போதாவது வந்து சேரும் என்கிற நம்பிக்கையோ
யாருடையது என்கிற எதிர்பார்ப்போ இன்றி
தினமும் அலைந்து கொண்டிருக்கிறது
காலையில் எழுகையில்
மாலையில் வீடு திரும்புகையில்
இரவு தூங்கப் போகையில்
ஏனிந்த அலைக்களிப்பு
உன்னுடன் இருக்கும் போதே
எங்கேயோ சென்று விடும் இந்த மனதை
எப்படித் திருப்புவது.
ஒருபோது சலிப்பாயும்
மறு போது தவிப்பாயும்
மாறிவிடுகிற மாயங்கள் எனக்குப் புரியவில்லை
எல்லாம் மறந்துபோனது போன்ற கணங்களில்
உன்னுடைய நினைவையாவது மீட்க வேண்டும்
என்கிற என்னுடைய தவிப்பைப் போன்றதே
இந்த அர்த்தமற்ற அவஸ்தைகளும்
மனசு காதல் போன்றவைகளை எல்லாம் விடுத்து
உடம்பு மட்டுமே துரோகமாய் எப்படி மாறுகிறது
-
25-05-2005
Monday, June 4, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நல்லா வந்திருக்கு
Post a Comment